Sunday, February 14, 2010

ஒரு 'பிரான்ஸ்' கிராமம்


Human Intrest detail news


கொசுக்களே இல்லாத நாடு எது என்றால் "பிரான்ஸ்' என்று சொல்லி விடலாம். ஊர் எது என்று கேட்டால் பேந்தப் பேந்த விழிக்க வேண்டியதுதான். ஆனால், எங்க ஊரில் கொசுவே இல்லை என்று கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்கிறார்கள் தளிஞ்சி கிராம மக்கள்.உடுமலை அருகேயிருக்கிறது தளிஞ்சி; முழுக்க முழுக்க மலை வாழ் மக்கள் வாழும் கிராமம். மொத்த மக்கள் தொகையே 400 மட்டும்தான்.

இங்கேதான் கொசுக்களுக்கு "நோ என்ட்ரி' போட்டிருக்கிறார்கள். கொசுக்கள் ஊருக்குள் ளே எட்டிப் பார்க்காததற்கு ஒரு சரித்திரக்கதையும் சொல்கிறார்கள்.ஆங்கிலேயர் ஆட்சியின்போது, மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியே நாகரீக வளர்ச்சியும், மக்கள் வசிப்பிடங்களும் இருந்தன. அப் போது இந்த கிராமத்தில் ஆங்கி லேயர்களுக்கென தனி அரண்மனை இருந்ததாம். விலங்குகளை வேட்டை யாடும் துரைகள், இங்கே ஓய்வு எடுப் பார்கள்.அந்த காலகட்டத்தில் மந்திர வித்தைகள் தெரிந்த மக்கள் பலரும் இருந்திருக்கிறார்கள். அவர்களில் கை தேர்ந்தவன் முத்து வீரன். அப்போது ஆங்கிலேயரின் அரண்மனையில் எக்கச்சக்க கொசுக்கள் இருந்ததாம்.

முத்து வீரனை அழைத்த ஆங்கிலேயர்கள், "நீ மந்திரத்தில் கெட்டிக்காரன் என்றால், ஏதாவது மந்திரம் செய்து கொசுக்களை ஒழி' என்று சவால் விட்டார்களாம்.முத்துவீரனும், "கவலைப்படாமல் தூங்குங்கள், இன்று இரவு கொசு இருக்காது' என கூறியுள்ளான். அதே போல், அன்று இரவு முழுவதும் ஒரு கொசு கூட அரண்மனைக்கும் வரவே இல் லை. காலையில் முத்து வீரனை அழைத்த ஆங்கிலேயர்கள் "சபாஷ், நீ கெட்டிக் காரன்தான்' என்று கூறி துப்பாக் கியால் சுட்டு கொன்று விட்டார்கள்.மீண்டும் மந்திரம் சொன்னால்தான் கொசுக்கள் வரும்; முத்துவீரனைக் கொன்று விட்டால் கொசுக்களே வராது என்று முடிவெடுத்தே கொன்றதாய் ஆங்கிலேயர் சொன்னதாய், செவி வழியில் கேட்ட கதையைச் சொல்கிறார் முதியவர் மாரி.

அடர்த்தியான காடுகளுக்கு நடுவே இருக்கிறது இந்த கிராமம். நிறைய மக்கள், ஆடு, மாடு, கோழிகள் இருந்தாலும் கொசுக்கள் இன்று வரை இல்லாததற்கு எது காரணமென்றே தெரியவில்லை.சுத்தமான காற்று, தூய்மையான குடிநீர், பசுமையான சூழல் என்று ஆரோக்கிய வாழ்வை வாழ்கிறார்கள் தளிஞ்சி மக்கள். கொசுக்களுக்குப் பிடிக்காத வாசமுள்ள மூலிகை இருப்பதாகவும், லார்வாக்களைச் சாப்பிடும் வனப் பூச்சிகளும், மீன்களும் இருப்பதாகவும் இயற்கைக் காரணமும் சொல்கிறார்கள்.சமவெளிக்கு சற்று தொலைவில் இருப்பதால், நகரத்தின் வாசனையும் இன்னும் அந்த கிராமத்தைத் தீண்டவில்லை. காரணம் எதுவாய் வேண்டுமானால் இருக்கட்டும், புகை போடாமல், ரசாயன கொசு ஒழிப்பான், மின் மட்டை எதுவுமே இல்லாமல், கொசுக்கடியும் இல்லாமல் நிம்மதியாய் நீங்கள் ஒரு தூக்கம் போட வேண்டுமென்றால் தளிஞ்சி கிராமத்துக்குப் போவதைத் தவிர வேறு வழியே இல்லீங்கோ.

No comments:

Post a Comment